இயக்குனர் திரு.ஸ்ரீதர் மறைந்ததற்கு எனது மனமார்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒருசில திறமைசாலிகள் மிக மிக அரிதாகத்தான் பிறப்பாங்க...அந்த மாதிரி ஒரு திறமைசாலிதான் ஸ்ரீதர் என்பது என் கருத்து...ஒருசில பேருக்கு ஒரு சில திறமைகள் ரொம்ப சிறப்பா அமைஞ்சிருக்கும். நம்ம ஸ்ரீதருக்கு சினிமாவை ஒரு visual medium ஆக காட்டும் திறமை ரொம்ப அபாரமா அமைஞ்சிருந்தது. எனக்கு ஸ்ரீதர் படங்களில் என்றும் பிடித்தவை "காதலிக்க நேரமில்லை", "ஊட்டி வரை உறவு", "கல்யாண பரிசு", "நெஞ்சில் ஓர் ஆலயம்", "நெஞ்சம் மறப்பதில்லை" ஆகியவை. இன்னைக்கு வரைக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படம்தான் ஒரு நகைச்சுவை திரைப்படம் எப்படி இருக்கனும் என்பதற்கு ஒரு அளவுகோலா, உதாரணமா அமைஞ்சிருக்கு. நகைச்சுவையின் உச்சம் அப்படின்னு காதலிக்க நேரமில்லை படத்தை சொல்லலாம். அதே மாதிரி, கல்யாண பரிசு நகைச்சுவை...ஏதோ நிஜ வாழ்க்கையில் நம்ம கண்ணெதிரில் தங்கவேலு பொய் சொல்றமாதிரியே இருக்கும்!!!!அதேமாதிரி, நுட்பமான உணர்வுகளை கையாண்டு திரைப்படம் எடுக்க ஆரம்பிச்சு மற்ற இயக்குனர்களை அந்த பாதைக்கு இழுத்தது ஸ்ரீதர் தான்...அவரோட சாதனைகளை அடுக்கிக்கிட்டே போகலாம்...ஆனா தமிழ் சினிமாவுக்குன்னு அவர் 3 முக்கியமான சாதனைகள் செஞ்சிருக்கார். ஒன்று - இளங்கோவனும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவில் சுத்தமான தமிழை புகுத்தி, தமிழ் சினிமாவுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுத்து, புரட்சி செஞ்சாங்க. அதே வரிசையில், தமிழ் சினிமாவில் பிரேமுக்கு பிரேம் நடிகர் நடிகைகள் நின்று நீண்ட நேரம் மூச்சு விடாம வசனம் பேசிக்கிட்டு இருந்ததை மாற்றி, நிறைய இயல்பான அன்றாட வாழ்கை முறையில் நாம உபயோகிக்கும் பேச்சுக்களை தேவையான அளவு நடிகர்களை பேச வச்சி, தேவையான அளவு முக பாவங்களிலும், சலனங்களிலும் நடிகர்களை நடிக்க வெச்ச பெருமை ஸ்ரீதருக்கு தான். அதாவது முதன் முதலில் சலன படத்தை சலன படமா காட்டின பெருமை அவரை சேரும்.
இரண்டு - "ஸ்ரீதர் படம்" அப்படின்னு கூட்டத்தை திரை அரங்குகளுக்கு கூட்டி வந்தது. முதன் முதலில் ஒரு இயக்குநருக்காக திரைப்படம் பார்க்க மக்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து ஸ்ரீதருக்காக தான். மூன்று - தாங்கள் தான் கலைக்கு சேவை செய்ய பூலோகத்தில் அவதரிச்ச மாதிரியும், தென்னிந்திய சினிமா கலைஞர்கள் ஆற்றலில் தாழ்ந்து போனவர்கள் மாதிரியும் ஆணவத்தில் இருந்த வட இந்திய சினிமா கலைஞர்களை தன்னுடைய திறமையால் வென்றவர் ஸ்ரீதர். ராஜ்கபூர், ராஜேந்திர குமார், திலீப்குமார், மீனா குமாரி, ராஜ் குமார், அமிதாப் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் ஸ்ரீதரின் வெற்றிப்படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். தென்னிந்திய திரை கலைஞர்கள் எத்தனை திறமையானவர்கள் என்பதை அகில இந்திய ரீதியில் நிலைநாட்டியவர்களில் ஸ்ரீதர் மிக மிக முக்கியமானவர்.
எல்லாத்தையும் விட, தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இன்னொன்னு சொல்லியே ஆகணும். அந்த காலக்கட்டத்தில் வந்த சில வண்ண திரைப்படங்கள் ஒன்னு ஒரே கலர் மழையா இருக்கும், இல்லன்னா நடிகர் நடிகைகள் கொஞ்சம் மாவு தடவின மாதிரி தெரிவாங்க.ஆனா ஸ்ரீதரோட வண்ண திரைப்படங்களில் நடிகர்கள் ரொம்ப pleasant & colourful ஆக தெரிவாங்க. அதுமட்டுமில்லை, முழு படத்தையும் நாலஞ்சு காஸ்ட்யூமை வெச்சே சமாளிச்சாலும் நம்ம கண்ணுக்கு எல்லாரும் குளுர்ச்சியா தெரிவாங்க, சுற்றுப்புறமும் குளுர்ச்சியா தெரியும். ஊட்டியை உண்மையான வண்ணமயமான அழகோட, கொஞ்சம் கூடுதல் அழகா ஸ்ரீதர் படங்களில் பார்க்கலாம். முதல் முதலில் கண்ணை உறுத்தாத வண்ண திரைப்படங்களை துல்லியமாக திரையில் கொண்டுவந்தவர் ஸ்ரீதர் தான்.
நல்ல புகழோட இருந்து நம்மளை மாதிரி நிறைய ரசிகர்களை பெற்று, இன்னைக்கும் அவரை நினைவு வெச்சிக்கிற மாதிரி படங்களை கொடுத்து வாழும்போது பாராட்டப்பட்ட கலைஞரா இருந்தார் ஸ்ரீதர். அவர் கூட சேந்து வேலை செஞ்ச எல்லோரும் ஜாம்பவான்களா இருந்தாங்க. அதனால, தன் திறமைக்கு ஏற்ற பெருமைகளோட, புகழோட வாழ்ந்து மறைஞ்ச ஸ்ரீதருக்கு ஒரு இறுதி வணக்கம் செலுத்துவோம் !!!!!


1 கருத்துரைகள்:
ஆம்.. என் சார்பிலும் அவருக்கு இறுதி வணக்கங்கள். அவர் இயக்கத்தில் ஊஞ்சலாடிய இளமையும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அவரின் நினைவைப் போற்றிய உங்கள் பதிவுக்கு நன்றி.
கருத்துரையிடுக