நம்ம நாட்டில் மட்டுமல்ல உலகத்துல எல்லா நாடுகளிலும் பணம் இல்லாதவங்க சின்ன சின்ன சில்லரை குற்றங்கள் செஞ்சிட்டு விசாரணை கைதியாகவே பல மாதங்கள் அல்லது வருஷங்கள் ஜெயிலிலே இருக்கிறதும், நம்ம நாட்டிலே ஆயுள் தண்டனை கைதிகள் அரசியல் காரணங்களுக்காக கிட்ட தட்ட 17 வருஷங்கள் கூட ஜெயிலிலே இருக்கிறதும் சாதாரணம்....அதே சமயம் பணக்காரங்க பெரிய குற்றம் செஞ்சிட்டும் அப்பட்டமா பண பலத்தை வச்சி தண்டனையே கிடைக்காம தப்பிக்கறதும் நடந்துகிட்டு தான் இருக்கு....இதே மாதிரி தன் பண பலத்தை வச்சி மிக புத்திசாலித் தனமான வக்கீல்களை துணைக்கழைத்து கொலை குற்றத்தில் இருந்து தப்பிச்சவர்தான் அமெரிக்காவின் முன்னாள் கால்பந்து (கைபந்து???? ஏன்னா, அமேரிக்காவில் கால்பந்தை கையால் விளையாடறாங்க) சூப்பர் ஸ்டார் ஓஜே சிம்சன். அமெரிக்காவில் செல்லமாக அவரை ஓஜே என்று அழைப்பார்கள்....லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் பணக்கார பகுதியில், நிகோல் பிரவுன் சிம்சன் (சிம்சனின் முன்னாள் மனைவி) மற்றும் அவரது ஆண் "நண்பர்" ரான் கோல்ட்மன் இருவரும் நிகோலின் காண்டோமினியம் வகை வீட்டிற்கு வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். ஒரு அடையாளம் தெரியாத ஆண் நிகோலின் கழுத்தை கிட்டத்தட்ட தலையே துண்டிக்கப்படும் அளவிற்கு அறுத்து கொன்றான். ஆண் நண்பரையும் 30 முறை கத்தியால் குத்தி கொன்றான். நள்ளிரவுக்கு பின் நிகோலின் ரத்தம் பூசிய நாயை கண்டு அதே பகுதியில் வசித்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொலை விசாரணையும் ஆரம்பித்தது.
அதேநாள் இரவு சிம்சனை விமான நிலையம் அழைத்து செல்ல அவரது வீட்டிற்கு 10:25 மணிக்கு வந்த லிமௌசின் கார் ஓட்டுனர் வெளியில் இருந்து வீட்டிற்குள் இருக்கும் சிம்சனை கூப்பிட பல தடவை தொலைபேசியில் அழைத்தும் பதிலே வரவில்லை. கிட்டத்தட்ட 10:56 மணிக்கு ஒரு ஆண் உருவம் வீட்டினுள் நழைந்ததை பார்த்த அந்த லிமௌசின் ஓட்டுனர் சிம்சன் தான் வீட்டினுள் செல்வதாக புரிந்து கொண்டு மீண்டும் சிம்சனை தொடர்புகொள்ள, சிம்சனும் இந்த முறை சிறிது நேரத்தில் கிளம்புவதாக உள்ளிருந்து பதில் சொன்னார். கிளம்பி,விமான நிலையம் சென்று, விமானத்தில் சிகாகோ நகரம் சென்று விட்டார்.
அடுத்த நாள்.....
அடுத்த நாள் சிகாகோவில் ஹோடேலில் இருந்த சிம்சனிடம் தொலைபேசியின் மூலம் கொலை செய்தியை பற்றி காவல்துறையினர் கூறிய போதும் சிம்சன் அதிர்ச்சி காண்பிக்கவில்லை, கொலைக்கான காரணம் கேட்கவில்லை, எப்படி நடந்தது என்று கேட்கவில்லை......அன்று மதியம் லாஸ் ஏஞ்சலீஸ் திரும்பினார்....வந்தபோது, அவரது வீடு முழுதுமாக காவலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. வீட்டின் முன்பகுதியில் ஆங்காங்கு இருந்த ரத்த கரைகள் குறிக்கப்பட்டு இருந்தன....
ஜூன் 17, 1992
காவல்துறை விசாரணையின் போது தனது கையிலிருந்த ஆழமான வெட்டு காயத்திற்கு சரியான காரணம் சொல்ல முடியாததாலும், மேலும் குற்றத்தை சிம்சனோடு இணைக்கும் ஆதாரங்கள் சிக்கியதாலும் சிம்சனை கைது செய்ய காவல் துறையினர் முடிவு செய்தனர், சிம்சனின் வக்கீலோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதாவது, ஜூன் 17 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு சிம்சன் காவல் நிலையம் வந்து சரணடைவது என்று ஒப்பந்தம் !!!!!! ( சிம்சன் இல்லாமல் ஒரு சாதாரண citizen இருந்திருந்தால் கழுத்துல கை வெச்சி இழுத்துக்கிட்டு போயிருப்பாங்க !!!!!!!)
சரித்திர புகழ் வாய்ந்த ஊர்வலம்.......
சொன்ன நேரத்துக்கு ஓஜே வராததால், ஒருவழியாக தூக்கம் கலைஞ்சி காவலர்கள் ஓஜே வீட்டுக்கு அவரோட வக்கீலையும் கூட்டிட்டு போனா, அண்ணன் ஒரு தற்கொலை கடிதம் எழுதி வச்சிட்டு மாயமா மறைஞ்சிட்டாறு....ஒருவழியா சாயந்திரம் 06:20 மணிக்கு ஒரு வெள்ளை காரில் ஓஜே வலம் வருவதாக அதை பார்த்த ஒரு காரோட்டி தகவல் சொல்ல அப்போ ஆரம்பிச்சது சரித்திரம் புகழ் ஊர்வலம்....
ஒரு டஜன் காவல்துறை வாகனங்கள், ஹெலிகாப்டர், ஓவரா ஆர்வம் கொண்ட பொது ஜனங்களோட வாகனங்கள் பின் தொடர நம்ம ஊரு அமைச்சர் கணக்கா நம்ம அண்ணன் ஊர்வலம் வந்துக்கிட்டே இருந்தாரு. இந்த சரித்திர நிகழ்ச்சியை அமெரிக்கா முழுதும் பாக்க வேணாமா??? அதனால, எல்லா தொலைகாட்சி சானல்களும் இந்த மாப்பிள்ளை ஊர்வலத்தை நேரடி ஒளிபரப்பு செஞ்சாங்க....http://www.youtube.com/watch?v=HcyyCi2b2AY
இந்த மாப்பிள்ளை ஊர்வலம் ஒருவழியா சிம்சனின் வீட்டுக்கே வந்து முடிஞ்சதும், காவல்துறையினர் சிம்சனை கைது செஞ்சாங்க....சிம்சன் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்த $8750 பணம், ஒரு கைத்துப்பாக்கி, பாஸ்போர்ட், ஒட்டு தாடி & மீசை எல்லாம் கைப்பற்றப் பட்டன....விசாரணை ஆயத்தங்கள்....
அமெரிக்காவில் கொலை வழக்கு விசாரணை ஆரம்பிக்குமுன் ஜூரி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தல் என்பது மிக மிக முக்கியம்...குற்றவாளியின் நிறம், இனம், குற்றத்தின் தன்மை எல்லாத்தையும் பார்த்து அந்த குற்றவாளிக்கு தண்டனை தரக்கூடிய ஜூரியாக அரசு தரப்பும், குற்றவாளிக்கு தண்டனை தர தயங்கக்கூடிய ஜூரியாக குற்றவாளியின் வழக்கறிஞரும் தேர்ந்தெடுக்க முயற்சி செய்வாங்க....இந்த இரட்டை கொலை வழக்கிலும் ஜூரி தேர்ந்தெடுப்பு, லொட்டு லொசுக்கு எல்லாம் முடிஞ்சு, 1994 ஆம் ஆண்டு சிம்சன் கிட்ட நீதிபதி ஐயா குற்றத்தை ஒப்புக்கிரீங்களான்னு கேட்டபோது, "நான் குற்றமே செய்யலை" அப்படின்னு சொன்னாரு ஓஜே.
ஜனவரி 24,1995 - விசாரணை ஆரம்பம்
நிகோல் சிம்சனின் மனைவியாக இருந்தபோது காவல்துறைக்கு சிம்சன் தன்னை கொல்லப்போவதாக உதவி கேட்டு செய்த தொலைபேசி பதிவு, சிம்சன் நிகோலிடம் கடுமையாக, மோசமான கணவராக நடந்து கொண்டதாக இருவரின் நண்பர்களும் சொன்ன சாட்சிகள், ஓஜே வீட்டு வாசலிலும், படுக்கையறையில் கைப்பற்றப்பட்ட காலுரைகளிலும், கையுரைகளிலும் காணப்பட்ட ரத்த கரைகளும் நிகோலின் ரத்தத்தோடு நன்றாக பொருந்தியது, கொலை நடந்த இடத்தில் இருந்த ரத்தத்தில் பதிந்திருந்த ஷூ தடங்கள் சிம்சனின் ஷூ அளவோடு பொருந்தியது - இப்படி அரசு தரப்பில் 72 பலமான அசைக்கமுடியாதென்று கருதப்பட்ட சாட்சிகள் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டன....
அரசு தரப்பு செய்த பெரிய தவறுகள்
ஜூரிகளின் எண்ணிக்கையில் இன ரீதியான பிரதிநிதித்துவம் சமமாக இருக்குமாறு செய்ய தவறியது முதல் தவறு...ரத்தக்கறை படிந்த கையுறைகளை கைப்பற்றிய காவல் துறை அதிகாரி முன்னர் ஒரு சமூகவியல் ஆராய்ச்சியாளருக்கு அளித்த பேட்டியில் கறுப்பின மக்களை அவமதிக்கும் சொல்லை கூறி அழைத்ததோடு சில சமயங்களில் சமூக விரோதிகள் தப்பிக்காது தண்டனை அடைய தான் சில சாட்சிகளை "செட்டப்" செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.....அந்த பேட்டியின் பதிவு நீதிமன்றத்தில் சிம்சனின் வக்கீல்களால் தாக்கல் செய்யப்பட்டு ஜூரிகளின் மனதில் "அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட சாட்சிகள் யாவும் "செட்டப்" தானோ" என்ற சந்தேகம் விதைக்கப்பட்டது.....
அரசுதரப்பு வழக்கறிஞர் ஜூரிகளின் முன்பு சிம்சனின் குற்றத்தை மிகவும் துல்லியமா நிரூபிக்கணும் என்ற ஆவலில் நீதிமன்றத்தில் ரத்தக்கறையில் ஊறியிருந்த கையுறைகளை சிம்சனின் கைகளில் போட்டுக்காட்ட சொல்ல, சிம்சனின் கைகளில் கையுறை புக முடியவில்லை....கொலை செய்த போது உண்டான வியர்வை மற்றும் ரத்தத்தில் நன்றாக ஊறியிருந்ததால் கையுறை சுருங்கியதே அதற்கான அறிவியல் ரீதியான காரணம் என்று பின்னர் அரசு தரப்பு கூறினாலும் ஜூரிகளின் மனதில் அது பதியவில்லை.....சிம்சனின் கைகளில் கையுறை புகாததே அவர்களின் மனக்கண்ணில் பதிந்தது....http://www.youtube.com/watch?v=VssuCNMjgBg
"if it (gloves) doesnt fit, you must acquit(OJ)" என்று ஒஜேயின் வழக்கறிஞர் கூறிய "பஞ்ச் டயலாக்" அமெரிக்கா முழுதும் பிரபலமாகிவிட்டது.
அக்டோபர் 3, 1995 -விசாரணை முடிவு.....
நாடெங்கும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை முடிவு அக்டோபர் திங்கள் 3 ஆம் தேதி, 1995 ஆம் ஆண்டு, ஜூரி உறுப்பினர்களுக்குள் மூன்று மணிநேரம் விவாதம் செய்யப்பட்டு "ஓஜே குற்றம் செய்யவில்லை" என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு வெள்ளையினத்தினருக்கும் கறுப்பின மக்களுக்கும் நடுவே ஒரு கண்ணுக்கு தெரியாத பிளவையே ஏற்படுத்தியது.....அதாவது ஓஜே குற்றம் செய்து பண பலத்தால் கிடைத்த திறமையான வழக்கறிஞர்கள் மற்றும் கறுப்பினத்தவர் பெரும்பான்மையாக அங்கம் வகித்த ஜூரி ஆகியவற்றின் உதவியால் இரட்டை கொலை வழக்கிலிருந்து விடுதலை அடைந்ததாக வெள்ளைக்காரர்கள் புலம்பினார்கள்... இனவெறியால் கருப்பினத்தை சேர்ந்த ஒரு பெரிய புள்ளியை திட்டமிட்டு கொலை வழக்கில் காவல்துறை சிக்க வைத்ததாக கறுப்பினத்தவர் கோபம் கொண்டனர்.....
ஒருவேளை ஓஜே சிம்சன் நிஜமாகவே குற்றம் செய்யாமல் கூட இருந்திருக்கலாம்....எப்படி அவர் குற்றம் செய்தார் என்று உறுதியாக சொல்ல முடியும்???? அப்படியே குற்றம் செய்திருந்தாலும் எப்படி தாமதமாக தண்டனை கிடைத்தது? ஒரு குற்றத்திற்கு இரண்டு முறை தண்டிக்க அமெரிக்க சட்டத்தில் இடமில்லையே??? அதை அடுத்த பகுதியில் பார்போம் !!!!!!!



0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக