வணக்கம் மக்களே !!!நம்ம ஊருலே அங்கங்கே பசங்க நின்னு ஜொள்ளு விடறதை பார்த்திருக்கோம்.
ஆனா, ஒரு நாட்டின் ஜனாதிபதி எப்படி ஜொள்ளு விடுவார்? அதுவும் செய்தியாளர்கள் முன்னிலையிலேயே எப்படி ஜொள்ளு விடுவார் என்பதை இந்த வாரம் நியூயார்க் நகரில் நடைபெற்று கொண்டிருக்கும் ஐநா சபை கூட்டத்திற்கு வந்திருக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரி - சாரா பாலின் (அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர்) சந்திப்பின் போது எல்லாரும் தெரிந்து கொண்டார்கள்.
ஆஸிப் அலி ஜர்தாரியின் வாழ்கை வரலாறு புரட்டி பார்த்தால், அவர் பணக்கார வீட்டு ப்ளேபாயாக வலம் வந்திருப்பது தெரியும்.
இங்கே அமெரிக்காவிலே குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சாரா பாலின் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் பற்றி ஒன்றும் தெரியாத பாப்பா என்று ஜனநாயக கட்சியினர் மற்றும் ஊடகங்கள் கேலி பண்ணுவதால், சார பாலின் தற்போது ஐநா கூட்டத்திற்கு வந்திருக்கும் உலக தலைவர்களை சந்தித்து, அவர்களுடன் கை குலுக்கி, ஊடகங்களுக்கு புகைப்படங்கள் விநியோகித்து, தன்னுடைய வெளியுறவு துறை பற்றிய "அறிவை" மக்களுக்கு பறைசாற்றுவதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.
நம்ம ஆசியா கண்டத்தின் அமைதிக்கு எப்பவும் "கண்டமாக" இருக்கும் இந்திய-பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களை சந்திக்காம இருந்தா எப்படி?
பாகிஸ்தான் ஜனாதிபதிய பாக்க போன சாரா பாலினை நம்ம ஜர்தாரி பாத்தவுடனே என்ன சொன்னாரு? "நீங்க டிவியிலே பார்கிறதை விட நேரில ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க, ஹீ,ஹீ,ஹீ... இப்போதான் எனக்கு அமெரிக்க மக்கள் உங்க மேல பைத்தியமா இருக்கிறதுக்கான காரணம் புரியுது " அப்படின்னு வழிஞ்சிருக்காரு.
உடனே நம்ம சாரா பாலின் என்ன செஞ்சாங்க? அவங்க உடனே சிரிச்சிகிட்டே "ஹீ, ஹீ, ஹீ, யு ஆர் சோ நைஸ்" (இதை எப்படி வேணும்னாலும் தமிழில் மொழிபெயர்த்து கொள்ளுங்கள்) அப்படின்னு சொன்னாங்களாம்.
அந்த நேரம் பாத்து ஜர்தாரியின் உதவியாளர் இருவரையும் கை குலுக்குற மாதிரி செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கிறதுக்கு வசதியா "போஸ்" குடுக்க சொல்லியிருக்காரு.
உடனே சாரா பாலின் "இன்னொரு தடவை போஸ் கொடுக்கனுமா" என்று சொல்லி சிரிச்சிருக்காங்க.
உடனே ஜர்தாரி என்ன சொன்னாரு ? " அவரு (தன்னுடைய உதவியாளர்) வற்புறுத்தினா நான் உங்களை அணைச்சிக்கிட்டே போஸ் குடுக்க கூட ரெடி" அப்படின்னு போட்டார் ஒரு போடு !!!!! அவரு யாரு ? மிஸ்டர் பத்து பர்சென்ட் அப்படின்னு பேர் எடுத்தவரிலே !!!!!!
அதுக்கும் நம்ம சாரா பாலின் சிரிச்சிக்கிட்டே சமாளிச்சாங்கலாம்....
பாவம் அந்த உதவியாளர், சர்தாரிக்கும் சாரா பாளினுக்கும் தெரிஞ்ச அளவுக்கு வெளியுறவு துறை கொள்கைகள் பற்றி தெரியாது போலிருக்கு !!!!! அதனாலே ஜர்தாரி ஜாடையா சொன்ன குறிப்பை புரிஞ்சிக்காம கம்முனே இருந்திட்டாரு...அதனாலே, அணைத்துக்கொண்டே போஸ் கொடுக்கும் வாய்ப்பை பாவம் ஜர்தாரி இழந்துட்டாறு...
அமெரிக்காவின் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மேக்கேயினோட வெறித்தனமான பதவி தாகம் காரணமா அதிர்ஷ்டவசமா குடியரசு துணை தலைவர் வேட்பாளரான சாரா பாலினும், பேநசீரின் உயிரழப்பால் அதிர்ஷ்டவசமாக பதவிக்கு வந்த பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியும் தங்களது வெளியுறவு கொள்கைகளை பற்றிய அறிவை வெளிப்படுத்தி அப்படியே எல்லாரையும் ஸ்தம்பிக்க வெச்சிட்டாங்க !!!!!
இதே மாதிரி ஒரு தடவை பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி ஷௌகத் அஜிஜ் "என்னலே கவுக்க முடியாத பெண்ணே இந்த உலகத்தில் இல்லை" அப்படின்னு சவால் விட்டு, அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் கான்டலீசா ரைஸ் கிட்ட தன்னோட திறமையை காட்ட ஆரம்பிச்சாராம்....
கான்டலீசா ரைஸ் முறைச்ச முறைப்பிலே பயந்து போய் சந்திப்பு முடியும்போது பயத்திலே உளறி கொட்ட ஆரம்பிச்சிட்டாராம் ஷௌகத் அஜீஜ் .......
தலைவர்களும் மனிதர்கள் தானே?? அவங்களிலே கொஞ்சம் பேர் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருப்பாங்க தானே??? அப்படின்னு தானே கேக்கறீங்க?
தலைவர்கள் சில பல "பலவீனங்கள்" கொண்டிருந்தாலும் நாட்டு முன்னேற்றத்துக்காக செய்ய வேண்டிய கடமைகளை அந்தந்த நேரத்தில் ஒழுங்கா செஞ்சிட்டங்கன்னா மக்கள் ஏன் அவங்களோட மத்த விஷயங்களை பற்றி கேக்க போறாங்க?


9 கருத்துரைகள்:
சாரா பேலினை நீங்க் குலேசா ஃபாலோ பண்ணுங்க சொல்றேன்... அலாஸ்கா நாட்டிற்கும் :) ரஷ்யாவிற்கும் உள்ள வர்த்தக தொடர்பு அதனையொட்டிய இவரது வெளியுறவுத்துறை அறிவெல்லாம் பகிர்ந்துட்டாரே பார்த்தீங்களா... அட, அட வெளங்கிரும் மொக்கையன் கையிலும், பேலின் கையிலும் கொடுத்துட்டா...
ஜொள்ளு வாயன நானும் பார்த்தேன், இந்தம்மா எப்பப் பார்த்தாலும் நாக்கை, நாக்கை கடிச்சிட்டு தாங்க்யூ, தாங்க்யூ சொல்றதை பார்க்கிறோம் :))).
me the second
http://kumarankudil.blogspot.com/2008/09/blog-post_26.html
இதுதொடர்பான மற்றொரு பதிவு
ஹா ஹா ஹா, அந்தாள ட்ரீட்மெண்டுக்கு அனுப்பாம அதிபராக்கினா இப்படித்தான் செய்வார்.
பொண்டாட்டி இருந்த காலத்துலேயே அந்தாளு அப்படித்தான் இருந்தான். இப்போ தனிக்கட்டை வேற! சொல்லவா வேணும் ஜொள்ளுக்கு :)
அதிபர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா
அதிபர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா
முரளி கண்ணன் நீங்க சொன்னது ரொம்ப சரி...அதிபர்கள் வாழ்க்கையில் இதல்லாம் சகஜமாதான் இருக்கும் போல... புதுகை கண்ணன், ஜர்தாரி அண்ணன் தன்னோட வீட்டிலயே டிஸ்கோ நடத்தின பார்ட்டி!!! வேற எப்படி இருப்பாரு???
தெகா, நீங்க கவலை படாதீங்க, இதையெல்லாம் கவனிக்கறதை விட வேற முக்கியமான வேலை நமக்கு என்ன இருக்கு சொல்லுங்க!!!!!
அவர் புதுகை அப்துல்லா அண்ணன். நீ புதுகை கண்ணன்னு டைப்பிருக்க பாரு
கருத்துரையிடுக